சமந்தாவின் அடுத்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ: செம த்ரில்லர் படம் போல...
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமந்தாவின் அடுத்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது
சமந்தா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’யசோதா’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை சற்றுமுன் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் படுக்கையிலிருந்து எழுந்த வரும் சமந்தா ஜன்னலை திறந்து ஒரு புறாவை தொடும் த்ரில் காட்சியுடன் முடிவுக்கு வருகிறது
சமந்தாவுடன் வரலட்சுமி, உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
Very excited to present to you the first glimpse of our film #Yashoda#Yashoda #YashodaFirstGlimpse @varusarath5 @Iamunnimukundan @dirharishankar @hareeshnarayan #ManiSharma @krishnasivalenk @SrideviMovieOff @PulagamOfficial pic.twitter.com/7QabzACDcL
— Samantha (@Samanthaprabhu2) May 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments