close
Choose your channels

'யசோதா' யாருன்னு தெரியுமில்ல.. அந்த கிருஷ்ண பரமாத்வையே பெத்தவ.. 'யசோதா' டிரைலர்

Thursday, October 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா நடித்த ’யசோதா’ திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வழியாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ட்ரைலரில் யசோதா கர்ப்பமாக இருப்பது போன்றும் அதன் பிறகு அந்த குழந்தையை அவர் பெற்றெடுத்தவுடன் ஏற்படும் பிரச்சினை குறித்தும் அவரை சுற்றி ஏற்படுத்தியுள்ள சூழ்ச்சி குறித்தும் தெரிந்து கொண்டபின் அவர் எப்படி கொந்தளித்து எழுகிறார் என்பதும், தனது குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார் என்றும் என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரியவந்துள்ளது. 

அமைதியான அன்பான கர்ப்பிணியாகவும், அதேசமயம் ஆக்ரோஷமாக அடிதடியில் இறங்கும் ஒரு பெண்ணாகவும் இந்த படத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். அவருடைய நடிப்பு இந்த படத்தில் வித்தியாசமாக உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. 

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஹரி - ஹரிஸ் இயக்கியுள்ளார். மணிசர்மா இசையில் உருவாகியுள்ள இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment