ஒரே நாளில் 3 சமந்தா படங்கள் ரிலீஸ்: தென்னிந்தியாவின் முதல் சாதனை

  • IndiaGlitz, [Tuesday,August 21 2018]

ஒரு நடிகை நடித்த இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது என்பதே எப்போதாவது நடக்கும் நிகழ்வு ஆகும். இந்த நிலையில் நடிகை சமந்தா நடித்த மூன்று திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவிருப்பதால் இது தென்னிந்தியாவின் முதல் சாதனையாக கருதப்படுகிறது.

சிவகார்த்திகேயனுடன் சமந்தா நடித்த 'சீமராஜா' மற்றும் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த 'யூடர்ன்' ஆகிய திரைப்படங்கள் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மகேஷ்பாபு, சமந்தா நடித்த 'சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லெ செட்டு' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் படமான 'நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' என்ற படமும் அதே செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஒரு நடிகையின் மூன்று படங்கள் ஒரே நாளில் வெளியாவது தென்னிந்திய சினிமா வரலாற்றில் இதுவே முதல்முறையாக கருதப்படுகிறது. இந்த மூன்று படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று சமந்தாவின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

விஷாலுடன் மீண்டும் இணையும் வெற்றிப்பட இயக்குனர்

விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் உருவான 'மதகஜ ராஜா' மற்றும் 'ஆம்பள' ஆகிய படங்களில் 'மதகஜ ராஜா' ஒருசில பிரச்சனைகளால் வெளிவரவில்லை என்றாலும் 'ஆம்பள' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது

முழங்கால் தண்ணீரில் நின்று டீ ஆற்றும் நாயர்: வைரலாகும் வீடியோ

கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வந்த வரலாறு காணாத கனமழையால் கேரள மக்கள் இதுவரை தங்கள் வாழ்நாளில் கண்டிராத பெருந்துன்பத்தை அனுபவித்தனர்.

மீனவர்களுக்கு கண்ணீருடன் நன்றி சொன்ன கேரள மக்கள்

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியது.

தளபதி விஜய்யின் வித்தியாசமான கேரள நிவாரண நிதியுதவி

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த வரலாறு காணாத மழையால் அம்மாநிலம் பெரும் சேதத்தை சந்தித்தது. கேரள மக்களின் சோகத்தின் துயர் துடைக்க கோலிவுட் திரையுலகினர் பலர் நிதியுதவி செய்து வந்தனர்

இந்த சந்திப்பின் சந்தோஷத்தை கடவுள் மட்டுமே உணர முடியும்: விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய 'கோலமாவு கோகிலா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகபெரிய வரவேற்பை பெற்றுள்ளது.