12 விருதுகளுக்கு நாமினேட் ஆன சமந்தா படம்: குவியும் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Friday,November 12 2021]

சமந்தா நடித்த வெப்தொடர் ஒன்று 12 பிலிம்பேர் விருதுக்கு நாமினேஷன் செய்யப்பட்டிருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா நடிப்பில் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவான வெப்தொடர் ‘தி ஃபேமிலிமேன் 2’ என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த தொடருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு வந்தபோதிலும் அமேசான் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிறந்த சீரிஸ், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்பட 12 விருதுகளுக்கு இந்த தொடர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சமந்தா உள்பட ஒரு சிலருக்கு விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 12 விருதுகளுக்கு ‘தி ஃபேமிலிமேன் 2’ தொடர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் சமந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.