சமந்தாவின் 'சாகுந்தலம்' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ என்ற திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இருப்பினும் அதற்கான காரணத்தை படக்குழுவினர் தெரிவித்த நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி உள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் நவம்பர் 4ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது படக்குழுவினர் இந்த படத்தை இனி 3டி டெக்னாலஜியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதற்காக மேலும் சில நாட்கள் தேவைப்படும் என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்து உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திட்டமிட்டபடி நவம்பர் 4-ஆம் தேதி ‘சாகுந்தலம்’ வெளியாகவில்லை என்றாலும் ‘சாகுந்தலம்’ திரைப்படத்தை 3டி டெக்னாலஜியில் பார்க்கலாம் என்ற படக்குழுவினர்களின் அறிவிப்பு காரணமாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
We will be announcing the new release date soon!
— Sri Venkateswara Creations (@SVC_official) September 29, 2022
'#???????????????????????? ???????? ???? ????'.@Gunasekhar1 @Samanthaprabhu2 @ActorDevMohan #ManiSharma @neelima_guna @GunaaTeamworks @SVC_official @neeta_lulla @tipsofficial #EpicLoveStory #MythologyforMilennials#Shaakuntalam3D pic.twitter.com/m6RmM1OLfQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments