சமந்தாவின் 'சாகுந்தலம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு முறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமந்தா நடிப்பில், குணசேகர் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘சாகுந்தலம்’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகிய இந்த சரித்திர கதை அம்சம் கொண்ட படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த படம் ஆகும் என அறிவிக்கப்பட்டு அதன்பின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்த படம் பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ‘சாகுந்தலம்’ திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘சாகுந்தலம்’ படத்தில் மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
The Love that was forgotten... An unforgettable tale of Love that remains🦢#Shaakuntalam in theatres worldwide on April 14🤍@Gunasekhar1 @Samanthaprabhu2 @ActorDevMohan #ManiSharma @neelima_guna @GunaaTeamworks @SVC_official @tipsofficial @tipsmusicsouth #ShaakuntalamOnApril14 pic.twitter.com/TKFPSPpwEw
— Sri Venkateswara Creations (@SVC_official) February 10, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments