சமந்தாவின் 'சாகுந்தலம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,February 10 2023]

சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு முறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தா நடிப்பில், குணசேகர் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘சாகுந்தலம்’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகிய இந்த சரித்திர கதை அம்சம் கொண்ட படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த படம் ஆகும் என அறிவிக்கப்பட்டு அதன்பின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்த படம் பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ‘சாகுந்தலம்’ திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘சாகுந்தலம்’ படத்தில் மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

'யார் இந்த பேய்கள்': ஆயிரம் அர்த்தம் சொல்லும் கிருத்திகா உதயநிதியின் மியூசிக் வீடியோ!

 இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் 'யார் இந்த பேய்கள்' என்ற மியூசிக் வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆயிரம் அர்த்தங்கள் உள்ள அசத்தலான காட்சிகள்

பாதுகாப்பு பலராய்வு அதிகாரியாக அருண்விஜய் நடித்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

கடந்த ஆண்டு அருண் விஜய் நடித்த 'ஓ மை டாக்' 'யானை' மற்றும் 'சினம்' ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் அருண் விஜய் நடித்த 'பார்டர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

கணவர் எடுத்த தமிழ் நடிகையின் நீச்சல்குள புகைப்படம்.. இணையத்தில் வைரல்!

நீச்சல் குளத்தில் இருந்து கொண்டே இயற்கையை ரசிக்கும் தமிழ் நடிகையின் புகைப்படத்தை அவரது கணவர் எடுத்த நிலையில் இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. 

அப்பாவுக்காக பாடுனேன்.. தேனினும் இனிய குரலில் பாடிய எஸ்பிபி மகள்..! வைரல் வீடியோ!

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உலக புகழ் பெற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் அவருடைய மகன் எஸ்பிபி சரண் பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'பிச்சைக்காரன்' படத்தின் முதல் 4 நிமிடம் ரிலீஸ்.. விஜய் ஆண்டனி செய்யும் தொடர் புதுமை!

 விஜய் ஆண்டனி நடித்துள்ள 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் 4 நிமிட வீடியோவை வெளியிட  இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.