மார்ச் 30ல் சமந்தாவின் அடுத்த படம் ரிலீஸ்

  • IndiaGlitz, [Saturday,March 24 2018]

கோலிவுட் திரையுலகில் கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தம் நடைபெற்று வருவதால் மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. ஸ்டிரைக் முடிந்ததும் ஒரே நேரத்தில் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை சமந்தா நடித்த படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 30 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டிரைக் நடக்கும்போது எப்படி சமந்தா படம் மட்டும் ரிலீஸ் ஆகும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு தகவல், இந்த படம் சமந்தா நடித்த தெலுங்கு படம் என்பதாகும்

ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள 'ரங்கஸ்தாலம்' (Rangasthalam) என்ற படத்தில் சமந்தா நாயகியாக நடித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் மார்ச்30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, கவுதமி, பூஜா ஹெக்டே போன்ற தமிழ் ரசிகர்கள் அறிந்த நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்திருப்பதால் இந்த படம் தமிழகத்திலும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.