நல்ல வேளை தப்பிச்சேன்? பழைய காதல் குறித்து சமந்தா அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Monday,June 04 2018]

தெலுங்கு நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த நடிகை சமந்தா, திருமணத்திற்கு முன் நிகழ்ந்த காதல் குறித்தும், அந்த அபாயத்தில் இருந்து தான் நல்லவேளையாக தப்பித்ததும் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியபோது, 'சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'நடிகையர் திலகம்' படத்தில் நடிக்கும்போது நான் என் சொந்த வாழ்க்கை கதையில் நடிப்பதை போன்று உணர்ந்தேன். நான் ஒரு நடிகரை கண்மூடித்தனமாக காதலித்தேன். ஆனால் நல்ல வேளையாக அந்த நபரிடம் இருந்து நான் தப்பித்துவிட்டேன். இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையும் சாவித்திரி வாழ்க்கை மாதிரியே ஆகியிருக்கும். நான் செய்த புண்ணியம் தான் நான் நாகசைதன்யாவை சந்தித்தது என்று கூறியுள்ளார்.

சமந்தாவின் இந்த பேட்டி அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சமந்தா குறிப்பிட்ட அந்த நடிகர் யாரென்பதுதான் தற்போது வலைத்தளங்களின் முக்கிய விவாதமாக உள்ளது.

More News

'காலா' குறித்து பேசுவது தேவையற்றது: கர்நாடக முதல்வர் சந்திப்புக்கு பின் கமல் பேட்டி

காவிரி பிரச்சனை குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்களிடம் பேசுவதற்காக நேற்று இரவு பெங்களூர் சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்

காலா படத்திற்காக ஜோராக கைதட்டிய பாமக ராம்தாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன.

திருமண நாளில் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்

பெரியகுளம் அருகே முதலாம் திருமண நாளில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் எதிர்பாராத வகையில் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஷாலுக்கு முதல் பெருமையை தந்த சென்னை

விஷால், சமந்தா நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியான 'இரும்புத்திரை' திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று நல்ல வசூலை பெற்று கொண்டிருக்கின்றது.

விஜய் விருதுகள்: விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு 4 விருதுகள்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி வசூல் அளவிலும் மிகச்சிறந்த வெற்றியை பெற்றது என்பது தெரிந்ததே