சமந்தாவின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,April 02 2019]

சமீபத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சமந்தாவும் அவருடைய கணவர் நாக சைதன்யாவும் இணைந்து நடித்த 'மஜிலி' என்ற தெலுங்கு திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் தெலுங்கு மாநிலங்களில் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர்.

நாகசைதன்யா, சமந்தா நடித்துள்ள இந்த படத்தை ஷிவா நிர்வானா இயக்கியுள்ளார். கோபிசுந்தர் இசையில் விஷ்ணு ஷர்மா ஒலிப்பதிவில் பிரவீன் பூடி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் என்ற நிறுவ்னம் தயாரித்துள்ளது.