தெறிக்கவிடும் ஆக்சனில் சமந்தா.. சிட்டாடல்: ஹனி ஃபன்னி வெப்சீரிஸ் டிரைலர்..!

  • IndiaGlitz, [Tuesday,October 15 2024]

நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள சிட்டாடல் என்ற வெப்தொடர் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் நவம்பர் 7ஆம் தேதி இந்த தொடர் அமேசன் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த வெப்தொடரின் ட்ரைலர் வெளியாகி உள்ள நிலையில் சுமார் மூன்று நிமிடங்கள் கொண்ட இந்த ட்ரெய்லரில் சமந்தாவின் அதிரடி ஆக்சன் காட்சிகள் இருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் இந்த டிரைலரை கொண்டாடி வருகின்றனர்.

வருண் தவான் மற்றும் சமந்தா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சிட்டாடல் தொடரை ராஜ்&டிகே இயக்கியுள்ளனர். இதில் சமந்தா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்தார் என்பதும் அதேபோல் ஜேம்ஸ்பாண்ட் போல் ஒரு ஏஜென்ட் ஆக நடித்து உள்ளார் என்பதும் டிரைலரில் இருந்து தெரிய வருகின்றது.

அதிரடி ஆக்சன் காட்சிகள், மகளுடன் சென்டிமென்ட் காட்சிகள் என சமந்தா நடிப்பில் தூள் கிளப்பி இருப்பதை அடுத்து இந்த வெப்தொடர் நிச்சயம் வெற்றி தொடராக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.