close
Choose your channels

கட்டுக்கதைகளை உடைத்தெறிந்தவர் சமந்தா: விஷால்

Saturday, May 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த படம் நல்ல வசூலை கொடுத்ததால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வரும் ஜூன் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷால், ''காலங்காலமாக கூறப்பட்டு வரும் கட்டுக்கதையை உடைத்தவர் சமந்தா' என பெருமையாக பேசினார்

பொதுவாக திரையுலகில் திருமணம் ஆன நடிகைகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் அப்படியே கிடைத்தாலும் அந்த படங்கள் வெற்றி அடைவதில்லை என்றும் காலங்காலமாக கூறப்பட்டு வரும் கட்டுக்கதையை சமந்தா, 'இரும்புத்திரை' படத்தின் மூலம் உடைத்துள்ளார். எனது அடுத்த படத்திற்கும் சமந்தாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யும்படி எனது இயக்குனரிடம் கூறுவேன். சமந்தாவும், ஒளிப்பதிவாளர் ஜார்ஜும் இருந்தால் அந்த படம் நிச்சயம் ஹிட் தான்' என்றும் விஷால் கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment