கட்டுக்கதைகளை உடைத்தெறிந்தவர் சமந்தா: விஷால்

  • IndiaGlitz, [Saturday,May 26 2018]

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த படம் நல்ல வசூலை கொடுத்ததால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வரும் ஜூன் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷால், ''காலங்காலமாக கூறப்பட்டு வரும் கட்டுக்கதையை உடைத்தவர் சமந்தா' என பெருமையாக பேசினார்

பொதுவாக திரையுலகில் திருமணம் ஆன நடிகைகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் அப்படியே கிடைத்தாலும் அந்த படங்கள் வெற்றி அடைவதில்லை என்றும் காலங்காலமாக கூறப்பட்டு வரும் கட்டுக்கதையை சமந்தா, 'இரும்புத்திரை' படத்தின் மூலம் உடைத்துள்ளார். எனது அடுத்த படத்திற்கும் சமந்தாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யும்படி எனது இயக்குனரிடம் கூறுவேன். சமந்தாவும், ஒளிப்பதிவாளர் ஜார்ஜும் இருந்தால் அந்த படம் நிச்சயம் ஹிட் தான்' என்றும் விஷால் கூறினார்

More News

விஜய்சேதுபதி படத்தில் பாட்டு பாடும் விஜய் டிவி பாடகி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரமணியம்மாள் என்பவர் இரண்டாம் பரிசு பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே. அடிப்படை இசையறிவு இல்லாமலேயே

ரஜினி-கமல் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சி திடீர் ரத்து

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட 'விஜய் விருது விழா' நிகழ்ச்சி இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது

பிரபல இயக்குனரின் படத்தில் இணைந்த விஷ்ணுவிஷால்

'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றிக்கு பின்னர் கோலிவுட் திரையுலகின் இளம் வெற்றி நடிகர்களின் பட்டியலில் இணைந்த நடிகர் விஷ்ணு தற்போது 'ராட்சஸன், 'ஜகஜால கில்லாடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சிம்புவின் அடுத்த அதிரடி 'பெரியார் குத்து'

நடிகராக மட்டுமின்றி பல்வேறு திறமைகள் கொண்ட சிம்பு, அவ்வப்போது தனிப்பாடல்கள் பாடி வெளியிட்டு வருவது தெரிந்ததே. அந்த வகையில் அவர் தற்போது புதிய தனிப்பாடல் ஆல்பம் ஒன்றில் பாடியுள்ளார்.

வெங்கட்பிரபுவின் 'ஆர்.கே.நகர்' சென்சார் தகவல்கள்

வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் உருவாகி வந்த 'ஆர்.கே.நகர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது