சமந்தா ஒரு இரும்பு பெண்மணி: பிரபலத்தின் கணவர் எழுதிய வைரல் பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
சமந்தா ஒரு இரும்பு பெண்மணி என பிரபல பாடகியின் கணவர் தனது சமூக வலைத்தளத்தில் எழுதிய பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சமந்தா நடித்த முதல் திரைப்படமான ’மாஸ்கோவின் காவிரி’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் ராகுல் ரவீந்திரன். இவர் பிரபல பாடகி சின்மயி கணவர் என்பதும் விரைவில் வெளியாக இருக்கும் ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது முதல் படத்தின் நாயகியான சமந்தா தற்போது என்ற மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ராகுல் ரவீந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
சுரங்கப் பாதை முழுவதும் இருட்டு, ஒளியே இல்லை! கால்கள் பாரமாக இருந்தாலும் இழுத்துக் கொண்டு செல்கிறாய். பயத்தையும் சந்தேகத்தையும் மூழ்கடிக்கும் போது நீ ஒரு போர்வீரன். நீ ஒரு இரும்பு பெண்மணி. நீ வெற்றிபெறுவது உனது பிறப்புரிமை. நீ தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தால் விரைவில் சூரியன் உன் மீது படும். போராடுபவர்கள் மட்டுமே இவ்வளவு நாள் தாக்குப் பிடிப்பார்கள். உன்னை மாதிரியான போராளி தான் போராட்டத்தில் வெற்றியும் பெறுவார்கள் என்பதை நீ மறுக்க மாட்டாய். ஏனெனில் அது உன்னை தோற்கடிக்க முடியவில்லை. நீ முன்பை விட பலசாலி ஆகி விட்டாய். நிரந்தரமாக வலிமையானதாக நீ மாறிவிட்டாய்’ என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவுக்கு சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நன்றி ராகுல்! யாரெல்லாம் போராடும் குணம் உள்ளவர்களோ அவர்களுக்கு இது பொருந்தும். உனக்கும் இது பொருந்தும். தொடர்ந்து போராடு. நாம் முன்பை விட மிகவும் வலிமையாய் மாறுவோம்’ என்று பதிவு செய்திருந்தார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com