10 எண்றதுக்குள்ள சொந்த குரலில் டப்பிங் பேசிய சமந்தா
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்துவிட்ட நிலையில் மீதியிருக்கும் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்புகள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் டப்பிங் பேசும் பணிகள் ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் நாயகியான சமந்தா, நேற்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, '10 எண்றதுக்குள்ள' படத்தின் டப்பிங் பணியை இன்றுடன் முடித்துவிட்டேன். இயக்குனர் விஜய் மில்டனுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அக்டோபரில் வெளிவரவுள்ள இந்த படத்தை மிகவும் எதிர்பார்க்கின்றேன்' என இந்த படம் வரும் அக்டோபரில் வெளியாகும் என சூசகமாக சமந்தா தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சமந்தா சொந்த குரலில் டப்பிங் பேசியது படத்திற்கு பெரிய பலம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விக்ரம், சமந்தா, பசுபதி, ஜாக்கி ஷெராப், மனோபாலா, சார்மி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Finished dubbing for #10endruduhkulla today. Thankyou @vijaymilton sir for the film. Come October come #10endruduhkulla. Fingers crossed
— Samantha Ruth Prabhu (@Samanthaprabhu2) July 30, 2015
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments