அதுக்குள்ள 14 வருஷம் ஆச்சா? சமந்தாவுக்காக பிரார்த்தனை செய்த சின்ன குழந்தைகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தா திரையுலகில் அறிமுகம் ஆகி 14 வருடங்கள் ஆனதை அடுத்து அவரே ஆச்சரியப்பட்டு வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா நடித்த ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் நடந்த 2010 ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 26ஆம் தேதி தான் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்தில் ஒரு சிறு கேரக்டரில் சமந்தா மற்றும் நாக சைதன்யா நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து சமந்தா திரை உலகில் அறிமுகம் ஆகி இன்றுடன் 14 வருடங்கள் பூர்த்தி செய்வதை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் பாடலின் பின்னணியில் வீடியோவை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதுமட்டுமின்றி சமந்தா 14 வருடங்கள் திரையுலகில் நிறைவு செய்வதை அடுத்து குழந்தைகள் இல்லத்திற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டதை அடுத்து அந்த குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
14 வருடங்கள் திரையுலகில் நிறைவு செய்த சமந்தாவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒரு நடிகை அதிகபட்சம் 10 வருடங்கள் திரையுலகில் நீடித்திருப்பது பெரிய விஷயம் என்ற நிலையில் 14 வருடங்கள் அதுவும் நாயகியாக தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக சமந்தா இருந்து வருகிறார் என்பது உண்மையில் ஆச்சரியம் தான்.
தற்போது உடல்நிலை தேறி மீண்டும் சமந்தா பிசி ஆகி உள்ளதை அடுத்து அவர் இன்னும் சில வருடங்கள் திரையுலகில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Even @Samanthaprabhu2 can't believe it's been 14 years since she stole all our hearts! 😀❤️ Craziest Instagram story!pic.twitter.com/CCtm1rn6Pq
— KARTHIK DP (@dp_karthik) February 25, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com