அந்த கடினமான 6 மாதங்கள்: சமந்தாவின் உருக்கமான பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா கடினமான ஆறு மாதங்கள் முடிவுக்கு வந்துள்ளதாக உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார் என்பதும் இந்த நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக சினிமாவிலிருந்து பிரேக் எடுக்க போவதாகவும் கூறப்பட்டது.
விஜய் தேவரகொண்டா உடன் ’குஷி’ என்ற படத்தில் நடித்து வரும் சமந்தா இந்த படத்தை முடித்தவுடன் சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க போவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் செல்பி புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அதில் ’மிக நீண்ட மற்றும் கடினமான ஆறு மாதங்கள் முடிவுக்கு வந்துள்ளது’ என்றும் ’இதை சாத்தியப்படுத்தியது நிறைவாக உள்ளது’ என்றும் பதிவு செய்துள்ளார்.
மேலும் ’குஷி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுக்க போவதாகவும் இப்போதைக்கு அவர் வேறு புதிய படங்களை நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்டு வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் அவர் திருப்பி கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments