எத்தனை ஹிட் கொடுத்தோம் என்பது முக்கியமில்லை.. மீண்டு வருவது தான் முக்கியம்: சமந்தா எமோஷனல் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையுலகில் ஒரு நடிகரோ நடிகையோ எத்தனை ஹிட் கொடுத்தார்கள் என்பது முக்கியமில்லை, கஷ்டங்களில் இருந்து அவர் மீண்டு வந்தாரா என்பது தான் முக்கியம் என நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
தோல்வியடைந்த திருமணம், உடல்நல பாதிப்பு மற்றும் வேலையில் கவனம் செலுத்த முடியாமை ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து என்னை பாதித்த போது நான் அதிலிருந்து மீண்டு வந்தேன் என்று சமந்தா கூறியுள்ளார்.
திருமண தோல்வி, உடல்நலக்குறைவு மற்றும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இருந்த நிலை என என்னை மூன்றும் ஒன்று சேர்ந்து தாக்கியது. இதனால் நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக சோர்வாக இருந்தேன். ஆனால் அதே நேரத்தில் உடல் நலத்தால் பாதிக்கப்பட்டு சோர்வாக இருந்த நட்சத்திரங்கள் பற்றி நான் படித்து தெரிந்து கொண்டேன். அவர்களால் இந்த கஷ்டங்களில் இருந்து மீண்டு வர முடிந்தது போல் என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு எழுந்தது.
இந்த நாட்டில் நான் ஒரு நேசிக்கப்படும் நட்சத்திரமாக இருக்கும்போது நானும் அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் என்னுடைய தோல்விகள் பகிரங்கப்படுத்துவதை பெரிது படுத்துவதில்லை. ஒரு ஸ்டார் என்பவர் எத்தனை சூப்பர் ஹிட் மற்றும் பிளாக் பாஸ்டர் படங்களை கொடுத்தார் என்பதும், எத்தனை விருதுகளை வென்றார் என்பதும் கணக்கில்லை. வலியையும் கஷ்டங்களையும் தாண்டி மீண்டு வந்தாரா என்பதுதான் முக்கியம்.
எனவே என்னிடம் இருப்பதை வைத்து நான் போராடப் போகிறேன், இதே போன்ற சூழ்நிலை இருப்பவர்களும் என்னை போல தொடர்ந்து போராடுவார்கள் என்று நம்புகிறேன்’ என்று நடிகை சமந்தா பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout