சத்குரு கண்ணசைத்தவுடன் சமந்தா ஆடிய டான்ஸ்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
சத்குரு கண்ணசைத்தவுடன் சமந்தா நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
ஜக்கிவாசுதேவ் கடந்த சில நாட்களாக மண் வளத்தை காப்போம் என்ற குறிக்கோளுடன் பைக்கில் பயணம் செய்து வருகிறார் என்பதும் அவரது இந்த பயணத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ஹைதராபாத் வந்த சத்குரு ஜக்கி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை நடிகை சமந்தா தொகுத்து வழங்கினார் என்பதும், சமந்தா கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு ஜக்கி பதில் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியின் போட்டோசூட்டின் போது சத்குரு லேசாக கண்ணை காட்ட உடனே சமந்தா Save Soil என்ற பதாகையுடன் நடனமாடினார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா ஒவ்வொரு ஆண்டும் கோவையில் சத்குரு நடத்தும் சிவராத்திரி விழாவின்போது தவறாமல் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments