close
Choose your channels

அல்லு அர்ஜூனின் 'புஷ்பா' படத்தில் சமந்தா: ஒரு ஆச்சரிய தகவல்

Monday, November 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சுமார் 250 கோடி ரூபாய் செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் அது மட்டுமின்றி ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலில் இந்த பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஒருவரை நடனமாட வைக்க திட்டமிட்டதாகவும், ஆனால் தற்போது சமந்தாவை நடனம் ஆட வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவரும் சமந்தாவின் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இந்த பாடலுக்கு அவர் நடனமாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏற்கனவே 'C/o சத்தியமூர்த்தி' என்ற திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் சமந்தா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment