கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நெட்டிசனுக்கு சமந்தாவின் கூல் பதில்!

  • IndiaGlitz, [Tuesday,December 21 2021]

கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நெட்டிசனுக்கு சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூலாக பதில் அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படத்தில் சமந்தா ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார் என்பதும், முதன் முதலாக சமந்தா ஆடிய இந்த ஐட்டம் டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் சமந்தாவின் ஐட்டம் டான்ஸ்க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக ஆண்கள் சங்கத்தினர் என்ற அமைப்பு இந்த பாடலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இந்த பாடல் யூடியூபில் பார்வையாளர்கள் விஷயத்தில் மிகப் பெரிய சாதனை செய்துள்ளது என்பதும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் சூப்பர் ஹிட்டாக இந்த பாடலும் ஒரு காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தாவின் ஐட்டம் டான்ஸ் குறித்து நெட்டிசன் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ’விவாகரத்து செய்து கொண்டு வாழ்க்கையை கெடுத்துக் கொண்ட செகண்ட் ஹேண்ட் ஐட்டம் டான்ஸ் நடிகை சமந்தா, ஜென்டில்மேன் இடம் இருந்து 50 கோடி ரூபாயை வரியில்லாமல் திருடிய திருடி’ என்று கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளார். இந்த விமர்சனத்தை பார்த்த நடிகை சமந்தா, ‘கடவுள் உங்கள் ஆன்மாவை ஆசிர்வதிக்கட்டும்’ என்று என்று கூலாக ரிப்ளை ரிப்ளை செய்தது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.