தன்னை போலவே உடை: குக் வித் கோமாளி' பவித்ராவை பாராட்டிய சமந்தா!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவர்களில் ஒருவர் பவித்ரா என்பதும் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சமீபத்தில் ’தெறி’ படத்தில் சமந்தா அணிந்த காஸ்டியூம் போலவே பவித்ரா அணிந்த சேலை உடன் கூடிய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலானது. இதையடுத்து பவித்ரா இன்னொரு சமந்தாவா? அடுத்த சமந்தா பவித்ராதானா? என்று நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வந்தார்கள் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பவித்ரா நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று பதிவு செய்துள்ளார். பவித்ராவுக்கு இந்த பாராட்டு நிச்சயம் மிகப்பெரிய சந்தோஷமாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது,
இந்த நிலையில் ’குக் வித் கோமாளி பவித்ரா தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் சதீஷ் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
You look beautiful ?? https://t.co/rCvA1UQLkc
— Samantha Akkineni (@Samanthaprabhu2) April 16, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments