சமந்தாவுக்கு இது தேவையில்லை, உடனடியாக நிறுத்த வேண்டும்.. சக நடிகர் அறிவுரை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக மிகவும் கடினமான உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் இவ்வளவு கடினமான உடற்பயிற்சி செய்வதை சமந்தா உடனே நிறுத்த வேண்டும் என அவருடன் நடித்த சக நடிகர் ஒருவர் அறிவுரை செய்துள்ளார்.
தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மயோசிட்டி என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய்க்காக அவர் கடந்த ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு அவர் திரும்பி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் கடினமான உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. சமந்தாவின் இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்ஸ், கமெண்ட்ஸ்கள் கிடைத்து வரும் நிலையில் அவருடன் ’தி ஃபேமிலி மேன் 2 ’ என்ற வெப் தொடரில் நடித்த மனோஜ் பாஜ்பாய் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு அறிவுரை தெரிவித்துள்ளார்.
சமந்தா மிகவும் கடினமான உழைப்பாளி என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்த நேரத்தில் அவர் மிகவும் வலி கொடுக்கக்கூடிய உடற்பயிற்சிகளை நிறுத்த வேண்டும், எளிமையான உடற்பயிற்சிகளை மட்டும் இப்போதைக்கு அவர் செய்ய வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments