2020க்கு டாட்டா காட்டும் நடிகை சமந்தாவின் அழகிய குடும்பம்… வைரல் புகைப்படம்!!!

  • IndiaGlitz, [Monday,December 28 2020]

 

தமிழ்நாட்டு மருமகளான நடிகை சமந்தாவின் அழகிய குடும்பப் புகைப்படம் இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் அறிமுகமாகி விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி, மெர்சல் போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்து இருக்கிறார்.

அதேபோல தெலுங்கில் இவர் நடித்த பல படங்களும் டாப் ஹிட் அடித்து இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டாரானா நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கொரோனா நேரத்தில் இந்த ஜோடி சமூக வலைத்தளத்திலும் படு ஆக்டிவாக இருந்தது. மாடித் தோட்டம், செல்லப் பிராணிகளுடன் க்யூட் வீடியோ, உடற்பயிற்சி எனத் தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர்.

அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை நடிகை சமந்தா தனது மாமானார் வீட்டு குடும்பதோடு படு ஜாலியாக கொண்டாடி இருக்கிறார். அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார். அதில் நாகர்ஜுனா உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திளைப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருக்கிறது. இந்தப் புகைப்படத்ததை தனது இன்ஸடாவில் போட்ட நடிகை சமந்தா கோல்ட் நிறத்திலான உடையை அணிந்து இருக்கிறார். மேலும் புகைப்படத்திற்கு மேலே, “கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி“ “ஹாப்பி நியூ இயர்” - Bye bye 2020 என 2020க்கு ஒரு டாட்டாவையும் காட்டி இருக்கிறார்.