கோவாவில் புத்தாண்டை கொண்டாடும் சமந்தா: யாருடன் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,December 31 2021]

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவுக்கு 2021 ஆம் ஆண்டு சொந்த வாழ்க்கையில் ஒரு கசப்பான ஆண்டாக அமைந்தாலும் திரையுலகை பொறுத்தவரை வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே ஒரு சில ஹிட் படங்களை கொடுத்துள்ள சமந்தா மேலும் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக புத்தாண்டை அவர் கோவாவில் கொண்டாட முடிவு செய்துள்ளார். சமீபத்தில் ’யசோதா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனது நண்பர்களுடன் அவர் கோவா சென்றுள்ளார். தனது நெருக்கமான நண்பர்கள் மற்றும் அவர் வளர்த்துவரும் நாய்க்குட்டி உடன் புத்தாண்டு கொண்டாட அவர் கோவா சென்றுள்ளார் என்பதும் கோவாவில் அவர் இந்த புத்தாண்டை சிறப்பாக ஜாலியாக கொண்டாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கில் உருவாகும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சமந்தா, ‘சாகுந்தலம்’, ’யசோதா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்து முடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’தி ஃபேமிலிமேன் 2’ தொடரை இயக்கிய ராஜ்&டிகே இயக்கத்தில் ஒரு தொடரிலும் சமந்தா நடிக்க உள்ளதால் 2022ஆம் ஆண்டு திரையுலகை பொறுத்தவரை சமந்தாவிற்கு ராசியான ஆண்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.