கோவா பீச்சில் கிளாமர் உடையில் சமந்தா: வேற லெவலில் வைரலாகும் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,December 27 2021]

கோவா பீச்சில் நீச்சல் உடையில் வேற லெவலில் இருக்கும் சமந்தாவின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவரை பிரிந்த பின்னர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் என்றும் கிளாமர் காட்சிகளில் கூட அவர் நடிக்க தயங்குவதில்லை என்பது சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ படத்தின் ஐட்டம் பாடலில் இருந்து தெரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தாவுக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோவாவில் நீச்சல் உடையுடன் தண்ணீரில் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமந்தா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் ஒரு சில நிமிடங்களில் இந்த புகைப்படம் 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று வேற லெவலில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தா தற்போது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘ஷாகுந்தலம்’ மற்றும் ‘யசோதா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும், அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கில் தயாராகும் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார் என்பதும், ‘தி ஃபேமிலிமேன் 2’ தொடர் இயக்குனரின் வெப்தொடரிலும் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.