கழுத்தில் பூமாலை, நெற்றியில் குங்குமம்.. முழுசா ஆன்மீகவாதியாக மாறிய சமந்தா..!

  • IndiaGlitz, [Wednesday,July 19 2023]

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கழுத்தில் பூமாலை, நெற்றியில் குங்குமத்துடன் முழுசா ஆன்மீகவாதியாக மாறிய புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது ’குஷி’ என்ற திரைப்படத்திலும், ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி முழுமையாக ஓய்வு எடுக்கப் போவதாகவும் தன்னுடைய மயோசிட்டிஸ் நோய்க்கு மீண்டும் சிகிச்சை எடுக்க போவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கோவில் கோவிலாக சுற்றி வரும் சமந்தா சமீபத்தில் வேலூரில் உள்ள தங்க கோவிலுக்கு சென்ற புகைப்படம் வெளியானது. இந்த நிலையில் தற்போது கோவையில் உள்ள ஈஷா பவுண்டேஷன் சென்றுள்ள சமந்தா, அங்கு சக பெண் பக்தர்களுடன் உட்கார்ந்து கண்ணை மூடி தியானம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கழுத்தில் பூமாலை ,நெற்றியில் குங்குமம் ஆகியவற்றுடன் தோற்றமளிக்கும் சமந்தாவை பார்க்கும் போது அவர் முழுமையாக ஆன்மீகவாதியாக மாறிவிட்டது தெரிய வருவதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.