பச்சை காஸ்ட்யூமுக்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ்: பதிலடி கொடுத்த சமந்தா!

  • IndiaGlitz, [Saturday,March 12 2022]

நடிகை சமந்தா சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டபோது பச்சை கிளாமர் காஸ்ட்யூமில் வருகை தந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் ஒரு சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் பதிவாகியுள்ளது

இந்த நிலையில் தனது பச்சை கிளாம் காஸ்ட்யூம் புகைப்படங்களுக்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். ஒரு பெண்ணை அவர் அணிந்திருக்கும் உடையை அடிப்படையாகக்கொண்டு விமர்சனம் செய்வது மிகவும் எளிதான ஒரு விஷயமாக உள்ளது. ஒரு பெண்ணின் உடை, இனம், கல்வி, சமூக நிலை, தோற்றம் ஆகியவற்றை வைத்து மிக எளிதாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்

நாம் 2022ஆம் ஆண்டில் இருக்கிறோம். ஒரு பெண்ணை அவருடைய உடையை மட்டும் அளவிட்டு மதிப்பீடு செய்வதை நிறுத்திவிட்டு நம்மை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாமே. மக்கள் ஒருவரை புரிந்து கொள்ளும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்யும் போது சுயவிமர்சனமும் மிகவும் முக்கியம். நமது கொள்கைகளை வேறொருவர் மீது சுமத்துவதால் எந்தவித நன்மையும் கிடையாது. ஒரு நபரை விமர்சனம் செய்யும்போது எழுதும் வார்த்தைகளில் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்’ என்று சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.