ஒத்திவைக்கப்பட்ட சமந்தாவின் 'யசோதா' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,October 17 2022]

பிரபல நடிகை சமந்தா நடித்த ‘யசோதா’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீசாக இருந்த நிலையில் அந்த படத்தின் முக்கிய பணிகள் காலதாமதம் ஆனதால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரிஹரிஷ் என்பவரின் இயக்கத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த ‘யசோதா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சமந்தா எழுத்தாளராக நடித்துள்ளார்.

த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் நவம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.