இது 2024ஆம் வருடம்.. இதுமாதிரி கேள்விகள் கேட்பதை நிறுத்துங்கள்: சமந்தா கோபம்..!

  • IndiaGlitz, [Tuesday,November 05 2024]

நடிகை சமந்தா உடல் எடையை கூட்ட வேண்டும் என்று ரசிகர் ஒருவர் கருத்து கூறிய நிலையில் இப்படியான கேள்விகளை தயவு செய்து நிறுத்துங்கள். இது 2024 ஆம் வருடம்; ஒவ்வொருவரையும் அவர்களாகவே வாழ விடுங்கள் என்று கோபமாக பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளின் ஒருவரான சமந்தா, இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும், அவ்வப்போது இன்ஸ்டாவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார் என்பது தெரிந்தது.

அந்த வகையில், சமீபத்தில் அவர் ரசிகர்களுடன் உரையாடிய போது, ஒரு ரசிகர் தயவு செய்து இன்னும் கொஞ்சம் உடல் எடையை கூட்டுங்கள் என கூறியிருந்தார். அதற்கு சற்று கோபமாகவே வலைதள பதில் அளித்த சமந்தா, உடல் எடை குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி கேட்கிறீர்கள்; நான் மிகவும் கட்டுக்கோப்பாக உடலை வைத்திருக்க ஆன்டி- இன்பிளாமெட்ரி டயத்தில் உள்ளேன்.

குறிப்பிட்ட எடையில் நான் இருக்க வேண்டும்; ஏனெனில் எனக்கு இருக்கும் மயோசிட்டிஸ் நோய் அப்படிப்பட்ட தன்மை கொண்டது. எனவே, மற்றவர்களை குறித்து மதிப்பிடுவதை தயவு செய்து நிறுத்துங்கள். அவர்களை அவர்களாகவே வாழ விடுங்கள்; இது 2024 ஆம் வருடம் என்று பதிவு செய்துள்ளார்.