'புலி' விஜய்க்கு பாராட்டு தெரிவித்த முன்னணி நடிகைகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு கலவையான விமர்சனங்களை ஊடகங்கள் கொடுத்தபோதிலும், குழந்தைகள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்களின் சப்போர்ட் காரணமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 'புலி' படத்தின் பிரமாண்டமான செட்டிங்குகள், பேசும் பறவை, ராட்சத ஆமை, ஒற்றைக்கண் மனிதன், உள்பட உலக தரமான கிராபிக்ஸ் காட்சிகளும் அனைவரையும் கவர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல முன்னணி நடிகர்கள் பார்த்து தங்களுடைய பாராட்டுக்களை விஜய்க்கும், 'புலி' படக்குழுவினர்களுக்கும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகைகளும் 'புலி' படத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் விஜய்யுடன் ஒரே ஒரு படத்தில் மட்டும் ஜோடியாக நடித்தவருமான தமன்னா 'புலி' படம் குறித்து கூறுகையில், ' இப்படி ஒரு படைப்பை கொடுத்த விஜய்க்கும் மற்றும் புலி படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார். அதேபோல் விஜய்யுடன் 'கத்தி' படத்தில் நடித்தவரும் தற்போது அவருடன் 'விஜய் 59' படத்தில் ஜோடியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை சமந்தாவும் 'புலி'யை பாராட்டியுள்ளார். 'புலி படத்தை நான் பார்க்கும்போது என்னை வேறொரு உலகத்தில் பயணிக்கும் அனுபவம் தந்தது' என்று சமந்தா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com