சீமராஜா; சமந்தா, சூரியின் முக்கிய பணிகள் முடிந்தது

  • IndiaGlitz, [Wednesday,July 11 2018]

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ள 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக இந்த படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில மாதங்களாக சமந்தா தான் நடிக்கும் படங்களுக்கு சொந்தக்குரலில் டப்பிங் செய்து வரும் நிலையில் 'சீமராஜா' படத்திற்கும் அவரே டப்பிங் செய்துள்ளார். இந்த நிலையில் இன்றுடன் அவரது பகுதி டப்பிங் பணி முடிந்துவிட்டதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த படத்தில் நடித்துள்ள சூரியும் அவரது பகுதி டப்பிங்கை முடித்துவிட்டார். இந்த படம் வரும் வினாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சமந்தா நடித்த 'சீமராஜா', 'சூப்பர் டீலக்ஸ்' மற்றும் 'யூடர்ன்' ஆகிய மூன்று படங்களும் இந்த ஆண்டே வெளியாகவுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இந்த ஆண்டில் சமந்தா நடிப்பில் 'இரும்புத்திரை', 'நடிகையர் திலகம்' மற்றும் 'ரங்கஸ்தலம்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகி மூன்றுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நயன்தாராவை பாராட்டிய சமந்தா! ஏன் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தின் டிரைலர் மற்றும் 'எனக்கு கல்யாண ஆசை வந்துருச்சு' சிங்கிள் பாடல் மிகபெரிய ஹிட்டாகியுள்ளது

பேரறிவாளன் விடுதலை குறித்து ரஞ்சித்திடம் ராகுல் கூறிய முக்கிய தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளான பேரறிவாளன் உள்பட 7 பேர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ராகுல்காந்தியை சந்தித்த ரஜினி பட இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.

பிரஸ் மிட் இல்லை, ஆடியோ விழா இல்லை: அதீத நம்பிக்கையில் 'தமிழ்ப்படம் 2' குழு

ஒரு திரைப்படம் எத்தனை கோடியில் தயாராகி இருந்தாலும் அந்த படத்தின் புரமோஷனே வெற்றிக்கு முதல் காரணமாக உள்ளது.

சென்னை திரும்பினார் ரஜினி: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த சில நாட்களாக டார்ஜிலிங் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.