ஒரே படத்தில் இருந்து விலகிய சமந்தா, ஸ்ருதிஹாசன்.. இருவரும் விலகியதற்கு ஒரே காரணம்..!

  • IndiaGlitz, [Thursday,October 24 2024]

'சென்னை ஸ்டோரி’ என்ற திரைப்படத்தில் முதலில் சமந்தா நடிக்க இருந்த நிலையில் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் சமந்தா நடிக்க இருந்த கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்த நிலையில் தற்போது அவரும் அந்த படத்தில் இருந்து விலகினார். இருவரும் ஒரே காரணத்திற்காக விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் திமேரி என். முராரி எழுதிய 'அரேஞ்ச்மென்ட் ஆஃப் லவ்' நாவலை அடிப்படையாகக் கொண்டு 'சென்னை ஸ்டோரி’ என்ற ஆங்கிலத் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில், இந்திய வம்சாவளி ஹாலிவுட் நடிகர் விவேக் கல்ரா ஹீரோவாக நடிக்கிறார், பாஃப்டா விருதைப் பெற்ற பிரபல ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் முதலில் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகி இருந்த நிலையில் கால்ஷீட் தேதி பிரச்சனை காரணமாக விலகினார். அதன் பிறகு ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமானார். தற்போது, ஸ்ருதிஹாசனும் அதே கால்ஷீட் தேதி பிரச்சனையால் ‘சென்னை ஸ்டோரி’ படத்திலிருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் புதிய நாயகியின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'குட் பேட் அக்லி' ஸ்பெயின் படப்பிடிப்பில் இருந்த த்ரிஷா.. திடீரென சென்னை திரும்பியது ஏன்?

அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் நிலையில், இந்த படப்பிடிப்பில் த்ரிஷா கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் சென்னை திரும்பி விட்டதாக

இந்த வார டிஆர்பி ரேட்டிங்.. முதல் 6 இடங்களில் சன் டிவி சீரியல்கள் தான்..!

தமிழ் தொலைக்காட்சிகளை பொருத்தவரை சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகியவற்றில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையே தான் கடும் போட்டி டிஆர்பியில் நிலவி வருகிறது

புஷ்பா 2 ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்.. இன்னொரு ஆச்சரியமான தகவல்..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும்,

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், டாப் 4 இல் இடம் பிடித்த போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்படம்

Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில்,

மாறி மாறி பதிலடி கொடுத்த சவுண்ட் சௌந்தர்யா.. முத்துக்குமரன், சுனிதா கப்சிப்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாள் எபிசோடையும் அன்றைய தினம் வரும் ப்ரோமோ வீடியோக்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சற்று முன் வெளியான இன்னொரு ப்ரோமோ வீடியோவில் சௌந்தர்யா