ஒரே படத்தில் இருந்து விலகிய சமந்தா, ஸ்ருதிஹாசன்.. இருவரும் விலகியதற்கு ஒரே காரணம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
'சென்னை ஸ்டோரி’ என்ற திரைப்படத்தில் முதலில் சமந்தா நடிக்க இருந்த நிலையில் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் சமந்தா நடிக்க இருந்த கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்த நிலையில் தற்போது அவரும் அந்த படத்தில் இருந்து விலகினார். இருவரும் ஒரே காரணத்திற்காக விலகி இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் திமேரி என். முராரி எழுதிய 'அரேஞ்ச்மென்ட் ஆஃப் லவ்' நாவலை அடிப்படையாகக் கொண்டு 'சென்னை ஸ்டோரி’ என்ற ஆங்கிலத் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில், இந்திய வம்சாவளி ஹாலிவுட் நடிகர் விவேக் கல்ரா ஹீரோவாக நடிக்கிறார், பாஃப்டா விருதைப் பெற்ற பிரபல ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் முதலில் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகி இருந்த நிலையில் கால்ஷீட் தேதி பிரச்சனை காரணமாக விலகினார். அதன் பிறகு ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமானார். தற்போது, ஸ்ருதிஹாசனும் அதே கால்ஷீட் தேதி பிரச்சனையால் ‘சென்னை ஸ்டோரி’ படத்திலிருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் புதிய நாயகியின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com