ராஜ்யசபா எம்பியின் சேலஞ்சை ஏற்று கொண்ட சமந்தா-நாகார்ஜூனன்

  • IndiaGlitz, [Sunday,July 12 2020]

உலகம் முழுவதும் அவ்வப்போது புதுப்புது சேலஞ்சுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகும் என்பதும் கடந்த சில ஆண்டுகளில் ஐஸ்கட்டி சேலஞ்ச் உள்பட பல்வேறு சேலஞ்சுகள் வைரல் ஆகி வருவதும் தெரிந்தது

அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இடையே மரம் நடும் சேலஞ்ச் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ராஜ்யசபா எம்பி சந்தோஷ் குமார் அவர்கள் நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை சமந்தாவுக்கு மரம் நடும் சேலஞ்ச் ஒன்றை கொடுத்துள்ளார்

இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்ட நாகார்ஜுனா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் தங்களது தோட்டத்தில் 3 செடிகளை வைத்து அதற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்தனர். இது குறித்த வீடியோவை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது சேலஞ்சை ஏற்றுக் கொண்டு சிறப்பாக செய்ததற்காக எம்பி சந்தோஷ் குமார் அவர்கள் சமந்தாவுக்கும் நாகார்ஜுனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமந்தா இந்த சேலஞ்சை தொடரும் வகையில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் தனது ரசிகர்கள் பகிர்ந்துள்ளார். இவர்கள் தனது சேலஞ்சை ஏற்று மூன்று செடிகள் நடவேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்

உலகம் முழுவதும் மரங்களை அதிகம் நட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் மரம் நடும் பணியில் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அமிதாப்பச்சன் குணமடைய வாழ்த்தும் திரையுலக பிரபலங்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நேற்றிரவு கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பாலிவுட்டை மட்டுமின்றி இந்திய திரையுலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அமிதாப்பை அடுத்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா: ஐஸ்வர்யாராய், ஜெயாபச்சன் நிலை என்ன?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாக நேற்றிரவு வெளிவந்த தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

சூர்யா பிறந்த நாளில் ஒரு ஆச்சரியம்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு

தமிழ்த் திரையுலகின் மாஸ் நடிகர்களின் பிறந்தநாளின்போது சமூகவலைதளத்தில் காமன் டிபி போஸ்டர்களை பிரபலங்கள் வெளியிடுவது கடந்த சில வருடங்களாக வழக்கமாக உள்ளது.

சீனாவை அடுத்து கஜகஜஸ்தானில் புதிய நோய்த்தொற்று: எச்சரிக்கை விடுக்கும் WHO!!!

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கஜகஜஸ்தானில் குடியிருக்கும் சீன மக்களுக்கு நேற்று ஒரு ரகசிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டினார்கள்: சிபிசிஐடி குறித்து சுசித்ரா திடுக் தகவல்

சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்டா விவகாரம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதற்கு பாடகி சுசித்ராவின் வீடியோவும்