ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா - நாக சைதன்யா.. இருவரும் பேசிக்கொண்டார்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவை கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில் மூன்று வருடம் கழித்து இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரத்துக்கு பின் இருவரும் சந்திக்கவில்லை, பேசவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அமேசான் பிரைம் வீடியோ சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாகசைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமந்தா தற்போது ’சிட்டாடல் ஹனி ஃபன்னி’ என்ற வெப் சீரியலில் நடித்து வரும் நிலையில் அமேசான் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அதேபோல் நாக சைதன்யாவும் தெலுங்கில் ’தூதா’ என்ற வெப் தொடரில் நடித்திருந்த நிலையில் அதன் வெற்றி விழாவில் கலந்து கொண்டார்.
இந்த இரு நிகழ்ச்சிகளும், ஒரே இடத்தில் நடந்ததால் த சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் தனித்தனியாக இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளவில்லை என்றும் பேசிக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
Celebrating #DhoothaOnPrime - Our most successful Telugu Original series.#AreYouReady #PrimeVideoPresents pic.twitter.com/PeZ6I8bZlb
— prime video IN (@PrimeVideoIN) March 19, 2024
our homegrown spy 🔎 #SamanthaRuthPrabhu #AreYouReady #PrimeVideoPresents pic.twitter.com/Cd8U5RE5df
— prime video IN (@PrimeVideoIN) March 19, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments