சமந்தா திருமணத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
- IndiaGlitz, [Tuesday,October 03 2017]
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வரும் 6ஆம் தேதி மிகச்சிறப்பாக திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மணமக்கள் வீட்டார் விறுவிறுப்புடன் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமந்தா திருமணத்திற்கு செலவு செய்யப்படும் தொகை குறித்த தகவல் முன்னணி ஊடகம் ஒன்றில் வெளிவந்துள்ளது. இந்து முறைப்படி அக்டோபர் 6ஆம் தேதியும் கிறிஸ்துவ முறைப்படி அக்டோபர் 7ஆம் தேதியும் நடைபெறவுள்ள இந்த திருமணத்திற்கு ரூ.10 கோடி செலவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திருமணத்திற்கு சுமார் 150 பேர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடைய விமான டிக்கெட், தங்கும் நட்சத்திர விடுதி, உணவு ஆகியவை மணமக்களின் வீட்டார்களின் செலவு என்றும் கூறப்படுகிறது.
இந்த திருமணத்தில் ராம்சரண் அவருடைய மனைவி உபசானா, வெங்கடேஷ், ராகுல் ரவீந்திரன் மற்றும் அவருடைய மனைவி, ராணா உள்பட பிரபல தெலுங்கு நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.