பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு சமந்தா கொடுத்த இன்ப அதிர்ச்சி: குவியும் பாராட்டுக்கள்

  • IndiaGlitz, [Tuesday,April 20 2021]

தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகைகளில் ஒருவரான சமந்தா பெண் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஆட்டோ ஓட்டுநர் கவிதா என்பவர் கலந்து கொண்டார். அவர் அப்போது தனது தாய் தந்தையின் மறைவிற்கு பிறகு தனது ஏழு சகோதரிகளையும் ஆட்டோ ஓட்டி காப்பாற்றுவதாக குறிப்பிட்டிருந்தார். அப்போது சமந்தா, கண்டிப்பாக உங்களுக்கு நான் உதவி செய்கிறேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

அந்த வாக்குறுதி அடிப்படையில் தற்போது 12.5 ரூபாய் ஐந்து லட்சம் மதிப்புள்ள புதிய கார் ஒன்றை பெண் ஆட்டோ ஓட்டுநர் கவிதா என்பவருக்கு வழங்கியுள்ளார். இந்த தகவல் தெரிந்ததும் சமந்தாவின் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

திடீரென ட்ரெண்டாகும் #ResignModi ஹேஷ்டேக்...!

கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அவர்கள் தவறிவிட்டார் என்பதை கூறும் வகையில், திடீரென டுவிட்டரில் #ResignModi ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் டாஸ்மாக் செல்ல 15 கட்டளைகள்… என்னென்ன?

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கு, வெளியூர்- வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இரவு நேரத்தில் வரத் தடை,

வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளது...! சத்யபிரதா சாகு....!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.