அந்தரத்தில் பறந்து ஆக்சன் காட்சியில் சமந்தா.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,April 29 2023]

நடிகை சமந்தா அந்தரத்தில் பறந்து ஆக்சன் காட்சிகளில் நடித்த காட்சிகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா என்பதும் அவர் நடிப்பில் உருவான ’சாகுந்தலம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சமந்தா திரைப்படங்களில் மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தனியார் குளிர்பான விளம்பர படத்தில் சமீபத்தில் அவர் நடித்த காட்சியின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கயிற்றில் தொங்கியபடி அந்தரத்தில் ஆக்சன் காட்சியில் நடித்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து லைக்ஸ், கமெண்ட்களை பதிவு செய்து கொடுத்து வருகின்றனர்.

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பதிவு செய்த 20 நிமிடங்களில் சுமார் ஒன்றரை லட்சம் லைக் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமந்தாவின் கடின உழைப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More News

கமல் சார்கிட்ட ஆட தெரியாதுன்னு பொய் சொல்லி அடி வாங்குனேன் - சுலக்ச்சனா

தமிழில் 1980 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுலக்ச்சனா. இவர் தான் தன்னுடைய இரண்டரை வயதில் இருந்து நடித்து வருகிறார்.

'ஆதிபுருஷ்' படத்தில் சீதை கேரக்டர்.. பிரபல நடிகையின் மாஸ் போஸ்டர்..!

பிரபாஸ் நடித்து வரும் 'ஆதிபுருஷ்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் சீதையாக நடித்து வரும் கீர்த்தி சனோன் மாஸ் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில்

'பொன்னியின் செல்வன் 2' முதல் நாளே இத்தனை கோடி வசூலா? ஆச்சரியத்தில் திரையுலகினர்..!

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் இந்த

நானோ, அமிதாப்போ செய்தால் ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: ரஜினிகாந்த் பேச்சு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று மறைந்த ஆந்திர முதல்வர் என்டி ராமராவ் அவர்களின் நூறாவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் என்டி ராமராவ் உடனான தனது நட்பு

அஜித்தின் நெருங்கிய நண்பர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அஜித்தின் நெருங்கிய நண்பரும் அஜித் நடித்த பல திரைப்படங்களை தயாரித்தவருமான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உடல்நல குறைவால் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின்