சென்னையை டைட்டிலாக கொண்ட ஹாலிவுட் படம்.. சமந்தா தான் நாயகி..!

  • IndiaGlitz, [Thursday,May 25 2023]

சென்னையை டைட்டிலாக கொண்ட ஹாலிவுட் திரைப்படத்தில் நடிகை சமந்தா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார் என்பதும் ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை சமந்தா தற்போது ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் விவேக் கல்ரா என்பவர் ஹீரோவாக நடிக்கும் ஹாலிவுட் திரைப்படம் ’சென்னை ஸ்டோரி’. இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை பிலிப் ஜான் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹீரோ தனது தாயின் மரணத்தை அடுத்து இந்தியாவில் உள்ள தனது மூதாதையர்களை பார்ப்பதற்காகவும், தனது தாயாரிடம் இருந்து பிரிந்த தந்தையை கண்டுபிடிப்பதற்காகவும் இந்தியா வருகிறார்.

சென்னையில் அவர் சமந்தாவை சந்திக்கும் நிலையில் சென்னையில் உள்ள கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், மசாலா தோசை, மீன் ஆகியவற்றை பார்த்து அவர் ஆச்சரியப்படுகிறார். மேலும் அவருக்கு சமந்தா மீது காதல் ஏற்படுகிறது. இருவரது கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆனதை அடுத்து இருவரும் சேர்ந்து நாயகனின் தந்தையை கண்டுபிடிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் என்ன? தந்தையை கண்டுபிடித்தார்களா? என்பதுதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.