உலக அளவில் கவனத்தை பெறும் சமந்தாவின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Friday,November 26 2021]

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஒருவரின் வெப்தொடரில் நடிக்க உள்ளதை அடுத்து இந்த தொடர் உலக அளவில் கவனம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

நடிகை சமந்தா ஹாலிவுட் இயக்குனர் பிலிப்ஜான் என்பவரின் இயக்கத்தில் உருவாக உள்ள வெப்தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வெப்தொடரை தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஓ பேபி’ என்ற படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தத் தொடரை இயக்கும் பிலிப்ஜான் உலக அளவில் புகழ் பெற்றவர் என்பதால் இந்த தொடரில் நடிக்கும் சமந்தாவும் உலக அளவில் இந்த தொடரால் பேசப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

’Arrangements of Love’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா மேலும் 2 தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது தெரிந்ததே.