இரும்புத்திரை படத்தில் விஷால், சமந்தா கேரக்டர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,December 26 2017]


விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் விஷாலின் கேரக்டர் மேஜர் ஆர்.கதிரவன் என்று வெளியான போஸ்டர் குறித்து அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தில் சமந்தா நடித்துள்ள கேரக்டர் குறித்த தகவலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சமந்தா டாக்டர் ரதிதேவி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவர் சைக்காலஜியில் பி.எச்.டி பட்டம் பெற்ற ஒரு கேரக்டரில் நடித்துள்ளதால் மேஜரும், டாக்டரும் இந்த படத்தில் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 

விஷால், அர்ஜூன், சமந்தா, மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

 ரஜினி அரசியலுக்கு வருவது, அவரது குடும்பத்திற்கும் நல்லதல்ல: தமிழக அமைச்சர்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பது அனேகமாக வரும் 31ஆம் தேதி தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ரஜினி இப்போதைக்கு எம்.எல்.ஏ மட்டும் ஆகலாம், முதல்வராக முடியாது: பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களின் சந்திப்பின்போது வரும் 31ஆம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாக கூறிய நிலையில்

அரசியல் ஆழம் தெரிந்ததால்தான் அமைதியாக உள்ளேன்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை இரண்டாம் கட்டமாக சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வருகிறார்.

ஜீவாவுக்கு ஜோடியாகும் அர்ஜூன் ரெட்டி நாயகி

ஜீவா நடித்த 'கலகலப்பு 2' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'கீ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நிக்கிகல்ராணி அவருக்கு ஜோடியாக நடிக்கின்றார்

நன்றி தெரிவித்த தினகரனுக்கு அதிர்ச்சி பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி

நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட இயக்கங்களை டிடிவி தினகரன் தோற்கடித்தார்.