பிரபல நடிகரின் அட்டாக் சேலஞ்சை ஏற்று கொண்ட சமந்தா: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகரின் அட்டாக் சேலஞ்சை ஏற்றுக்கொண்ட நடிகை சமந்தாவின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை சமந்தா ரெகுலராக ஜிம் சென்று உடற்பயிற்சி செய்து வருபவர் என்பதும், அவர் உடற்பயிற்சி செய்யும் பல புகைப்படங்கள் வீடியோக்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியாகி உள்ளது தெரிந்ததே
இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கொடுத்த அட்டாக் சேலஞ்சை நடிகை சமந்தா ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து அவர் கடினமான வெயிட்லிஃப்டிங் உள்பட பல உடற்பயிற்சி செய்யும் வீடியோ அவரது இன்ஸ்டாவில் பதிவாகியுள்ளது. மேலும் நடிகை சமந்தா இந்த அட்டாக் சேலஞ்சை பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன்கபூருக்கு கொடுத்துள்ள நிலையில் அவரும் அந்த சேலஞ்சை ஏற்று கொள்வதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் ’புஷ்பா’ என்ற திரைப்படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடி இளைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சமந்தா தற்போது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் அவர் ’சாகுந்தலம்' மற்றும் ’யசோதா’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் எனபது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments