டிஜிட்டல் உலகில் கால் வைக்கும் நடிகை சமந்தா!

  • IndiaGlitz, [Saturday,July 13 2019]

திருமணத்திற்கு பின்னரும் நாயகியாகவும் வெற்றிப்படங்களிலும் நடித்து வரும் சமந்தாவின் 'ஓ பேபி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமந்தா தற்போது புதிய முயற்சியாக வெப் சீரீஸ் ஒன்றில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

டிஜிட்டல் துறையின் அடுத்த வளர்ச்சியாக தற்போது இணையதள தொடர்கள் என்ற ‘வெப் சீரீஸ்’களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிரசன்னா, பாபிசிம்ஹா, பரத், ரம்யாகிருஷ்ணன், ராணா உள்பட சில முன்னணி நடிகர்களே தற்போது வெப் சீரிஸில் நடித்து வருகின்றனர். மேலும் சிலர் வெப் சீரிஸில் நடிக்கவும் தயாரிக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் அமேசான் பிரைம் தயாரிக்கவுள்ள ஒரு வெப் சீரீஸில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.