உயிர் வாழ பரிட்சை முக்கியமா? பிரபல இசையமைப்பாளரின் டுவீட்
- IndiaGlitz, [Monday,March 02 2020]
பிளஸ் டூ மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் மாணவர்கள் பரீட்சை எழுதி வருகின்றனர். சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பரீட்சையை எழுதி வரும் நிலையில் மாணவர்களுக்கு அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் தனுஷ் உள்பட பலர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் இன்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு கடையில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அறிவுரையாக எழுதப்பட்டுள்ள பதாகை ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதாகையில் அடேய் பசங்களா.... உயிர் வாழ்வதற்கு தேவையான அளவிற்கு முக்கியமான விஷயம் அல்ல பரீட்சை. ஜாலியா எழுதுங்கடே’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது
இதுகுறித்த புகைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சாம் சிஎஸ், தனது சமூக வலை பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ்-இன் இந்த பதிவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
?? #Exams pic.twitter.com/MJNEjEgAKr
— ?????? ?? ?? (@SamCSmusic) March 2, 2020