தளபதி 62 படத்தின் இசையமைப்பாளர் இவரா?

  • IndiaGlitz, [Wednesday,November 01 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சூப்பர் ஹிட் ஆகி அனைத்து தரப்பினர்களும் வசூல் அளவில் லாபம் அடைந்துள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை அடுத்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் செய்திகள் தற்போது வர தொடங்கிவிட்டன. இந்த படத்தின் நாயகியாக நடிக்க சோனாக்ஷி சின்ஹா அல்லது ராகுல் ப்ரித்திசிங் ஆகியோர்களுக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

துப்பாக்கி, கத்தி என இரண்டு படங்களிலும் ஹாரீஸ் ஜெயராஜ், அனிருத் ஆகியோர் அற்புதமான இசையை கொடுத்த நிலையில் விஜய்-முருகதாஸ் இணையும் ஹாட்ரிக் வெற்றி படமான 'தளபதி 62' படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது

இந்த நிலையில் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. சாம் சி.எஸ் இசையில் சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' மிகப்பெரிய வெற்றி அடைந்தது மட்டுமின்றி பாடல்களும் பின்னணி இசையும் பெருமளவு பேசப்பட்டது. மேலும் கார்த்திக், கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்கும் 'Mr.சந்திரமெளலி' படத்திற்கு இசையமைக்க சமீபத்தில் சாம் சி.எஸ் ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

'தளபதி 62' படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைப்பது உறுதி செய்யப்பட்டால், படம் வெளியானவுடன் அவர் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெறுவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.