'புஷ்பா 2' படத்தின் பின்னணி இசை வாய்ப்பு.. சாம் சிஎஸ் நெகிழ்ச்சி பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான 'புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து வந்தார். ஆனால், திடீரென இந்த படத்தின் பின்னணி இசைப்பணியை சாம் சிஎஸ் இடம் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை உறுதி செய்து, நெகிழ்ச்சியான பதிவையும் அவர் செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"புஷ்பா 2’ எனும் பயணத்தில் எனக்கு உண்மையாகவே ஒரு உச்சபட்ச அனுபவம் கிடைத்தது. என்னை இந்த படத்திற்காக தேர்வு செய்து, இந்த அற்புதமான பின்னணி இசைப் பணிகளை செய்ய வாய்ப்பளித்ததற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. தயாரிப்பாளர்கள் ஆதரவு இல்லை என்றால், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்காது.
அல்லு அர்ஜுன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. உங்கள் படத்திற்கான பின்னணி இசையை உருவாக்குவது எனக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்தது. இது உண்மையிலேயே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.
மேலும், இயக்குநர் சுகுமார் அவர்கள் படைப்பில் வேலை செய்வது எனக்கு பெருமை அளிக்கிறது. குறிப்பாக மாஸ் சண்டைக் காட்சிகளிலும் கிளைமாக்ஸ் பணியிலும் பணியாற்றிய அனுபவம் முற்றிலும் தனித்துவமானது.
எடிட்டர் உள்பட ’புஷ்பா 2’ குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி. டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்கில் பார்த்து மகிழுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
It's been an overwhelming journey for me on #Pushpa2 💥
— 𝐒𝐀𝐌 𝐂 𝐒 (@SamCSmusic) December 3, 2024
Thank you for considering me and giving me this wonderful experience of working on BGM @MythriOfficial This couldn't have been possible without the tremendous support and belief of my producer #ravishankar #Naveenyerneni &… pic.twitter.com/dTdqZ6OTOa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments