'புஷ்பா 2' படத்தின் பின்னணி இசை வாய்ப்பு.. சாம் சிஎஸ் நெகிழ்ச்சி பதிவு..!

  • IndiaGlitz, [Tuesday,December 03 2024]

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான 'புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து வந்தார். ஆனால், திடீரென இந்த படத்தின் பின்னணி இசைப்பணியை சாம் சிஎஸ் இடம் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை உறுதி செய்து, நெகிழ்ச்சியான பதிவையும் அவர் செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

புஷ்பா 2’ எனும் பயணத்தில் எனக்கு உண்மையாகவே ஒரு உச்சபட்ச அனுபவம் கிடைத்தது. என்னை இந்த படத்திற்காக தேர்வு செய்து, இந்த அற்புதமான பின்னணி இசைப் பணிகளை செய்ய வாய்ப்பளித்ததற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. தயாரிப்பாளர்கள் ஆதரவு இல்லை என்றால், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்காது.

அல்லு அர்ஜுன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. உங்கள் படத்திற்கான பின்னணி இசையை உருவாக்குவது எனக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்தது. இது உண்மையிலேயே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.

மேலும், இயக்குநர் சுகுமார் அவர்கள் படைப்பில் வேலை செய்வது எனக்கு பெருமை அளிக்கிறது. குறிப்பாக மாஸ் சண்டைக் காட்சிகளிலும் கிளைமாக்ஸ் பணியிலும் பணியாற்றிய அனுபவம் முற்றிலும் தனித்துவமானது.

எடிட்டர் உள்பட ’புஷ்பா 2’ குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி. டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்கில் பார்த்து மகிழுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

இது ஒரு சாதாரண திரைப்படம் அல்ல.. போர்க்குரல்! ரிலீஸ் தேதியை அறிவித்த 'காந்தாரா' ரிஷப் ஷெட்டி..!

'காந்தாரா' படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகராக மாறிய ரிஷப் ஷெட்டி, நடிக்க இருக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

என்னால் தான் ரஜினி, இளையராஜா இடையே சண்டை வந்தது: அமெரிக்க நடிகையின் பதிவு..!

என்னால் தான் இசைஞானி இளையராஜாவுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் இடையே ஒரு அழகான செல்ல சண்டை நடந்தது என அமெரிக்க பாடகி, தயாரிப்பாளர் மற்றும் நடிகை சிந்தியா என்பவர் தனது

கனமழையால் துயரம்.. தவெக தலைவர் விஜய்யின் நெஞ்சை பதற வைத்த செய்தி..!

திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது

36 வயதில் பிகினி போட்டோஷூட்.. மாலத்தீவில் தமிழ் நடிகையின் மாஸ் புகைப்படங்கள்..!

தமிழ் திரையுலகில் 36 வயதை கடந்து உள்ள நடிகை, சமீபத்தில் மாலத்தீவில் எடுத்த பிகினி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விளக்கேற்றும் வழிபாடு: ஜோதிடர் சீதா சுரேஷ் அளிக்கும் ஆன்மீக உண்மைகள்

ஆன்மீக கிளிட்ஸ் சேனலில், புகழ்பெற்ற ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள் விளக்கேற்றும் வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி பேசியுள்ளார்.