MR.சந்திரமெளலி படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,October 22 2017]

நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதன்முதலில் இணைந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்குனர் திரு இயக்குவதாகவும் இந்த படத்திற்கு MR.சந்திரமெளலி என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

MR.சந்திரமெளலி படத்தில் நடிக்கும் நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைக்க சாம் சி.எஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்ற 'விக்ரம் வேதா' உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

தனஞ்செயன் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கவுள்ளது.

More News

வெட்கமே இல்லாமல் இப்படி செய்யலாமா நீங்கள்? எச்.ராஜாவுக்கு விஷால் கேள்வி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தை ஆன்லைனில் பார்த்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தயவுசெய்து எல்லா படத்துக்கும் பிரச்சனை செய்யுங்கள்: அரசியல்வாதிகளுக்கு மயில்சாமி வேண்டுகோள்

விஜய் நடித்த 'மெர்சல்' படம் போல் அரசியல்வாதிகள் அனைத்து படங்களுக்கும் பிரச்சனை செய்தால் அனைத்து தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றுநடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.

நயன்தாராவின் 'அறம்' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கலெக்டராக நடித்த 'அறம்' திரைப்படம் வரும் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

'மெர்சலில் எந்த காட்சியும் நீக்கம் இல்லை: ஹேமாருக்மணி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவில் டிரெண்டை ஏற்படுத்தியது என்பதும், எதனால் இந்த டிரெண்ட் உருவானது என்பதும் அனைவரும் அறிந்ததே

'மெர்சலுக்காக விரைவில் பணம் கொடுப்பேன்: ப.சிதம்பரம்

தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் ஜிஎஸ்டி வசனம் குறித்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு இந்த பிரச்சனை தேசிய பிரச்சனையாக உருவாகிவிட்டது.