பயணி தவறவிட்ட ரூ.15 ஆயிரம் : ஆட்டோ டிரைவர் என்ன செய்தார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,March 10 2018]

ஆட்டோவில் தவறவிட்ட பொருள் திரும்ப கிடைப்பது என்பது அரிதிலும் அரிதாகி வரும் நிலையில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.15 ஆயிரத்தை  காவல்துறையினர்களிடம் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ டிரைவர் ஒருவர் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

சென்னையில் கடந்த பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருபவர் முத்துராஜ். இவருடைய ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர், தான் கொண்டு வந்திருந்த கைப்பையை மறந்து ஆட்டோவிலேயே விட்டுவிட்டு இறங்கி சென்றுவிட்டார். அந்த கைப்பையில் ரூ.15 ஆயிரம் ரொக்கம், விலையுயர்ந்த மொபைல் போன் மற்றும் சில மருந்துகள் இருந்துள்ளது.

இந்த நிலையில் பயணி தவறவிட்ட கைப்பையை ஆட்டோ டிரைவர் முத்துராஜ் காவல்துறையினர்களிடம் ஒப்படைத்து உரியவரிடம் சேர்த்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருடைய நேர்மையை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர். மேலும் நெட்டிசன்களும் அவருடைய நேர்மையை பாராட்டி நெட்டிசன்கள் பதிவு செய்துவருகின்றனர்.

 

More News

எச்.ராஜா வழங்கிய வீரத்தமிழச்சி விருது யாருக்கு தெரியுமா?

எச்.ராஜாவின் சமீபத்திய பேஸ்புக் பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் திருச்செந்தூர் பகுதி பாஜக பெண் நிர்வாகி ஒருவருக்கு அவர் வீரத் தமிழச்சி என்ற விருதை கொடுத்துள்ளார்.

சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி குத்தி கொலை: பெரும் பரபரப்பு

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எச்.ராஜாவின் அட்மினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சமீபத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பெரியார் சிலை குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த பதிவுக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,

அஜித்துடன் 50 நாட்கள் சுற்றப்போகும் காமெடி நடிகர் யார் தெரியுமா?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

இன்றே நிறுத்துங்கள், இல்லையேல்...எச்சரிக்கை விடுத்த காயத்ரி ரகுராம்

நடிகை, நடன இயக்குனர் என கோலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் காயத்ரி ரகுராம். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரே இவர் பிரபலம் அடைந்தார்